
சிறுநீரகக் கோளாறு பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பொன்னம்பலத்துக்கு கமல் ஹாசன் உதவியுள்ளார்.
1990களில் வில்லன் நடிகராகப் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பொன்னம்பலம். சண்டைக்கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி நடிகராக மாறினார். சமீபத்தில் பிக் பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் புகழை அடைந்தார்.
இந்நிலையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த கமல் ஹாசன், பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார். மேலும், பொன்னம்பலத்தின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அவருடைய இரு குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக கமல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.