மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - நலன் குமாரசாமி?

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியை மீண்டும் நலன் குமாரசாமி இயக்கவுள்ளதாக...
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - நலன் குமாரசாமி?
Updated on
1 min read

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியை மீண்டும் நலன் குமாரசாமி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுபற்றி பேசிய விஜய் சேதுபதி, நலன் குமாரசாமியை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்ததாகவும் மீண்டும் இருவரும் இணைந்து படம் பண்ணவேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என இரு படங்களில் நலனுடன் இணைந்து பணிபுரிந்தாலும் அவருடைய பாணியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். 

சூப்பர் டீலக்ஸ் படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றிய நலன், அடுத்ததாக ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் - லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல், கடைசி விவசாயி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com