
காதலி ஷாலினியை இன்று திருமணம் செய்து கொண்டார் தெலுங்கு நடிகர் நிதின்,
2002-ல் ஜெயம் படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார் நிதின். தயாரிப்பாளர் சுதாகர் ரெட்டியின் மகன் ஆவார். ஏராளமான படங்களில் நடித்து தெலுங்குத் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் தனது காதலி ஷாலினியை இன்று மணமுடித்துள்ளார் நிதின். ஹைதராபாத்தில் உள்ள தாஜ் ஃபலாக்நுமா பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. ஏப்ரல் 15-ல் துபையில் திருமணம் செய்ய இருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.
நிதினுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். திருமணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.