
குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரமேஷ் திலக், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.
சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய், காக்கா முட்டை, ஒருநாள் கூத்து போன்ற பல படங்களில் நடித்தவர் ரமேஷ் திலக். சண்டை இயக்குநர் ராம்போ ராஜ்குமாரின் மகள் நவலட்சுமியை 2018 மார்ச் மாதம் திருமணம் செய்தார்.
இந்நிலையில் ரமேஷ் திலக் - நவலட்சுமி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கிறான் என ரமேஷ் திலக் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
திரையுலகைச் சேர்ந்த பலரும் ரமேஷ் திலக் - நவலட்சுமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.