கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர்

பிரேக்கிங் பேட் தொலைக்காட்சித் தொடர் மூலமாகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் பிரையன் கிரான்ஸ்டன்...
கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர்
Published on
Updated on
1 min read

பிரேக்கிங் பேட் தொலைக்காட்சித் தொடர் மூலமாகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் பிரையன் கிரான்ஸ்டன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தற்போது மீண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினேன். இருந்தும் எனக்கு கரோனா தொற்று உறுதியானது. கரோனாவால் 1,50,000 அமெரிக்க மக்கள் இறந்துவிட்டார்கள். நான் அதிர்ஷ்டவசமாக அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளேன். எனக்கு அறிகுறிகள் ஓரளவுதான் இருந்தன. எனவே அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், கைகளைக் கழுவுங்கள், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றார்.

1981 முதல் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரையன் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

கரோனாவால் பல ஹாலிவுட் நடிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நட்சத்திர தம்பதியான டாம் ஹேங்ஸ் - ரீடா வில்சன், இட்ரிஸ் எல்பா, டேனியல் டே கிம், இந்திரா வர்மா எனப் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்கள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bryan Cranston (@bryancranston) on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com