தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உயரும் எண்ணிக்கை: கரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்கள்!

கரோனாவால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

News image
Updated On :17 மார்ச் 2020, 7:31 am

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 100 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

முதலில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், தானும் தன் மனைவி ரீட்டா வில்ஸனும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார் ஹாங்க்ஸ். அங்குதான் அவருக்கும் அவர் மனைவிக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது.

Story image

தற்போது மூன்று ஹாலிவுட் நடிகர்கள், கரோனாவால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

Story image

கரோனா வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை 40 வயது ஒல்கா கரிலேன்கோ தெரிவித்துள்ளார். 2008-ல் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சொலாஸில் கதாநாயகியாக நடித்தார். இந்நிலையில் கரோனா வைரஸால் ஒல்கா பாதிக்கப்பட்டுள்ளார்.

Story image

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் கிறிஸ்டோபரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். நானும் எனது குடும்பமும் (பிறருக்கு நோயைப் பரப்பாமல் இருப்பதற்காக) சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். அனைவரும் ஒன்று சேர்ந்தால் இந்த வைரஸை விரட்டியடிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். 

Story image

தோர், அவெஞ்சர்ஸ் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இட்ரிஸ் எல்பாவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். எனக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் வந்திருப்பது இன்று காலை உறுதியாகியுள்ளது. இதுவரை எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. ஆனாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.