ராவணன் நடிகர் உடல்நலன் குறித்து வதந்தி: குடும்பத்தினர் மறுப்பு

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதியின் உடல்நலன் குறித்து வெளியான வதந்திகளை அவருடைய குடும்பத்தினர் மறுத்துள்ளார்கள்.
படம்: ட்விட்டர்
படம்: ட்விட்டர்

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதியின் உடல்நலன் குறித்து வெளியான வதந்திகளை அவருடைய குடும்பத்தினர் மறுத்துள்ளார்கள்.

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ராமானந்த் சாகா் இயக்கிய ராமாயணத் தொடரை தூா்தா்ஷனில் ஒளிபரப்ப வேண்டும் என்று சமூகவலைத்தளங்கள் வாயிலாக பலா் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, ராமாயணம் தொடா், மாா்ச் 28-ஆம் தேதி முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ராமாயணம் தொடா், முதன் முதலில் தூா்தா்ஷனில் கடந்த 1987-ஆம் ஆண்டில் ஒளிபரப்பானது.

ராமானந்த் சாகர் இயக்கிய இந்தத் தொடரில் ராமராக அருண் கோவிலும் சீதையாக தீபிகா சிகாலியாவும் ராவணனாக அரவிந்த் திரிவேதியும் அனுமனாக தாரா சிங்கும் நடித்து இந்தியா முழுக்கப் புகழ் பெற்றார்கள். ஜனவரி 1987 முதல் ஜுலை 1988 வரை ஞாயிறு காலை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் ஒளிபரப்பாகும்போது சாலைகளில் மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருக்கும்.

அத்தொடரில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி மறைந்துவிட்டதாக வதந்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து அரவிந்த் திரிவேதியின் உறவினர், கெளஷ்துப் திரிவேதி ட்விட்டரில் தெரிவித்ததாவது:

என்னுடைய மாமா அரவிந்த் திரிவேதி லங்கேஷ் நல்ல உடல்நலத்துடனும் பாதுகாப்பாகவும் உள்ளார். எனவே வதந்தியைப் பரப்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இப்போது இந்தத் தகவலைப் பகிருங்கள் என்று கூறியுள்ளார்.

ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி தனக்கான ட்விட்டர் கணக்கை சமீபத்தில் ஆரம்பித்தார். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து #RavanonTwitter என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பிரபலப்படுத்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com