ஹாலிவுட் போல இங்கும் படப்பிடிப்புக்கு அனுமதி தரவேண்டும்: தயாரிப்பாளர்கள் கோரிக்கை

கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஹாலிவுட் திரையுலகில் பாதுகாப்பு உடைகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து...
ஹாலிவுட் போல இங்கும் படப்பிடிப்புக்கு அனுமதி தரவேண்டும்: தயாரிப்பாளர்கள் கோரிக்கை

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது, திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது. மே 11 முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, கிராபிக்ஸ், நிற கிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கத் தேர்தலில் டி. சிவா தலைமையிலான பாதுகாப்பு அணியும் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் சார்பில் தேனாண்டாள் முரளி இராம நாராயணனும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணியைச் சேர்ந்த முரளி இராம நாராயணன், எஸ்.வி. சேகர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சருக்கு அறிக்கை வழியாக ஒரு கோரிக்கை வைத்துள்ளார்கள். அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த வாரம் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு அனுமதி அளித்தீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது, தமிழ்த் திரையுலகில் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஹாலிவுட் திரையுலகில் பாதுகாப்பு உடைகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து படப்பிடிப்பு நடைபெறுவது போல இங்கும் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com