கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு?

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு?

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஒத்திவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Published on

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஒத்திவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஒத்திவைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. ஆஸ்கர் தரப்பில் இதுபற்றிக் கூறியதாவது: ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமான உள்ளன. எனினும் புதிய தேதிகள் குறித்த எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஆஸ்கர் விருதுக்கு விண்ணபிக்கும் படங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது ஆஸ்கர் அமைப்பு. அதன்படி அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்களும் ஆஸ்கர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. எனினும் இந்த வருடம் வெளியான படங்களுக்கு மட்டும் இது பொருந்தும். இந்த மாற்றம் தற்காலிகமானது என்றும் அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com