பாதாள் லோக் இணையத் தொடருக்கு அபார வரவேற்பு: நடிகை அனுஷ்கா சர்மா குதூகலம்

பாதாள் லோக் இணையத் தொடருக்கு அபார வரவேற்பு: நடிகை அனுஷ்கா சர்மா குதூகலம்

இன்றைய காலக்கட்டத்தில் உயர்தரமான உள்ளடக்கம் தான் முக்கியமான அளவுகோலாக உள்ளது.
Published on

நடிகை அனுஷ்கா சர்மாவின் கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ், பாதாள் லோக் (Paatal Lok) என்கிற இணையத் தொடர் ஒன்றை தயாரித்துள்ளது. எனினும் இத்தொடரில் அனுஷ்கா நடிக்கவில்லை.

சுதிர் சர்மா தலைமையில் உருவாகியுள்ள இத்தொடரில் ஜெய்தீப் அக்லாவத், நீரஜ் கபி, குல் பனங், ஸ்வஸ்திகா முகர்ஜி போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - பிரோசித் ராய், அவினாஷ் அருண்.

குற்றவியல் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் சமீபத்தில் வெளியான பாதாள் லோக் தொடருக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது. நேர்மறை விமரிசனங்கள் நிறைய கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் அனுஷ்கா சர்மா. இணையத் தொடரின் வெற்றி குறித்து அவர் கூறியதாவது:

பாதாள் லோக் தொடருக்கு ரசிகர்களும் விமர்சகர்களும் அளித்த வரவேற்பைக் கண்டு அசந்து போயிருக்கிறேன். அருமையான உள்ளடக்கத்தினால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் உயர்தரமான உள்ளடக்கம் தான் முக்கியமான அளவுகோலாக உள்ளது. ரசிகர்கள் இதுவரை பார்க்காதவற்றை வழங்கவேண்டும் என்பதில்தான் நானும் எனது சகோதரரும் கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸும் கவனமாக இருந்தோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com