பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!

கே. பாக்யராஜ் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
Updated on
1 min read

ஏ.வி.எம். தயாரிப்பில் கே. பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படம் - முந்தானை முடிச்சு. 1983-ல் வெளியான இந்தப் படம் தமிழகமெங்கும் ஏராளமான திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்தது. பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் ஆனது.

கே. பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் உருவான இந்தப் படத்துக்கு இசை - இளையராஜா.

இந்நிலையில் முந்தானை முடிச்சு படம் ரீமேக் செய்யப்படுகிறது.

கே. பாக்யராஜ் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இதுகுறித்து ஆரம்பக்கட்டத் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. கதாநாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட மேலதிகத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com