சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, ஆர். பார்த்திபன் நடிப்பில் ஜேஜே பிரெட்ரிக் இயக்கியுள்ள படம் - பொன்மகள் வந்தாள். இசை - கோவிந்த் வசந்தா.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளன. இதனால் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சூர்யா துணிச்சலுடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
மே 29 முதல் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.