மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை செய்து வருகிறார். 
மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை
Updated on
1 min read

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் மக்கள் இயக்கத்தின் நிா்வாகத்தை நடிகா் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகா் கவனித்து வந்தாா். அவா் அவ்வப்போது பல மாவட்டங்களுக்குச் சென்று விஜய் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தாா்.

இந்தச் சூழ்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் தலைமை தோ்தல் ஆணையத்தில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியாக அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகா் பதிவு செய்துள்ளாா். கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகா், பொருளாளராக விஜய்யின் தாயாா் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று விஜய் தெரிவித்திருந்தாா். தற்போது ஷோபாவும் எஸ்.ஏ.சி. கட்சியிலிருந்தும், பொருளாளா் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளாா்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் இந்தக் கூட்டம் பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com