பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி சுசித்ரா: இன்ஸ்டகிராமில் வெளிப்படுத்திய கருத்து

ஒருவேளை என்னைப் பற்றி ஏற்கெனவே திரித்துக் கூறப்பட்டதை ஆழ்மனதில் நான் நம்பியிருந்தாலும்...
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி சுசித்ரா: இன்ஸ்டகிராமில் வெளிப்படுத்திய கருத்து
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் [பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாக புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள். 

இந்த வருட பிக் பாஸ் போட்டியில் முதலில் வெளியேறியவர் மூத்த நடிகை ரேகா. பாடகர் வேல்முருகன் 2-வது போட்டியாளராகவும் அடுத்ததாக நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியும் வெளியேறினார்கள்.

ஆரி, அனிதா, பாலா, ரியோ, சம்யுக்தா, சோம், சுசித்ரா என ஏழு பேர் கடந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் இடம்பெற்றார்கள். இவர்களில் குறைந்த வாக்குகளைப் பெற்ற பாடகி சுசித்ரா போட்டியிலிருந்து நேற்று வெளியேறினார். 

இதையடுத்து இன்ஸ்டகிராமில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது பற்றி சுசித்ரா கூறியதாவது:

ஒருவேளை என்னைப் பற்றி ஏற்கெனவே திரித்துக் கூறப்பட்டதை ஆழ்மனதில் நான் நம்பியிருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் குறும்படங்களினால் என்னைப் பற்றி மாற்றிக் காண்பிக்கப்பட்டதாலும்... பார்ப்பதற்கு நான் எப்படி இருப்பேன் என்பதை மீண்டும் எனக்கு நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறி தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com