கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த இயக்குநராக லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தேர்வு

2020-ம் ஆண்டுக்கான கேரளத் திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன...
கனி கஸ்ருதி - சூரஜ் வெஞ்சரமூடு
கனி கஸ்ருதி - சூரஜ் வெஞ்சரமூடு
Published on
Updated on
1 min read

2020-ம் ஆண்டுக்கான கேரளத் திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஏ.கே. பாலன் விருதுகளை அறிவித்தார். சிறந்த படமாக வசந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் சிறந்த நடிகையாக கனி கஸ்ருதி ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். ஜல்லிக்கட்டு படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

விருதுகளுக்குத் தேர்வானவர்கள்

சிறந்த படம்: வசந்தி 
சிறந்த படம் (2-ம் பரிசு): கெஞ்சிரா
சிறந்த வெகுஜன மற்றும் அழகியல் சார்ந்த படம்: கும்ப்ளாங்கி நைட்ஸ்
சிறந்த நடிகர்: சூரஜ் வெஞ்சரமூடு
சிறந்த நடிகை: கனி கஸ்ருதி
சிறப்புப் பரிசுகள்: அன்னா பென், நிவின் பாலி, பிரியம்வதா கிருஷ்ணா
சிறந்த இயக்குநர்: லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
சிறந்த அறிமுக இயக்குநர் - ரதீஷ் பாலகிருஷ்ணன்
சிறந்த துணை நடிகர்: ஃபஹத் ஃபாசில்
சிறந்த துணை நடிகை: ஸ்வாசிகா
சிறந்த குழந்தைகள் படம்: நானி
சிறந்த திரைக்கதை (அசல்): ரஹ்மான் பிரதர்ஸ்
சிறந்த திரைக்கதை (தழுவல்): பி.எஸ். ரஃபீக்  
சிறந்த ஒளிப்பதிவு: பிரதாப் வி நாயர்
சிறந்த படத்தொகுப்பு: கிரண் தாஸ்
சிறந்த பாடகர்: நஜிம் அர்ஷத்
சிறந்த பாடகி: மதுஸ்ரீ நாராயணன்
சிறந்த இசையமைப்பாளர்: சுஷின் ஷ்யாம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com