

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றிணைந்து நவரசா என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
பிரபல இயக்குநர் மணி ரத்னமும் ஜெயேந்திராவும் தயாரித்துள்ள இப்படத்தை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். 9 உணர்வுகளையும் 9 கதைகளையும் கொண்ட இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன், ஹலிதா, பிஜாய் நம்பியார். அரவிந்த் சாமி ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.
இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.
சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, சித்தார்த், அசோக் செல்வன், ரேவதி, நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி, ரித்விகா உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.