யார் வேண்டுமானாலும் சேனல் ஆரம்பிக்க அனுமதிக்கிறார்கள்: யூடியூப் நிர்வாகத்துக்கு வனிதா விஜயகுமார் கண்டனம்

தன் பெயரில் போலியான யூடியூப் சேனல்கள் ஆரம்பிக்கப்பட்டதற்கு வனிதா விஜயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Vanitha Vijaykumar என்கிற பெயரில் நடிகை வனிதா விஜயகுமார் யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அந்த சேனலுக்கு இதுவரை 5,99,000 பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் அதே பெயரில் போலியான யூடியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதை வனிதாவிடம் ஒருவர் முறையிட்டிருந்தார். இதையடுத்து ட்விட்டரில் வனிதா விஜயகுமார் கூறியுள்ளதாவது:

மோசடியான சேனல்கள் மீது யூடியூப் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் சேனல் ஆரம்பிக்கவும் இயங்கவும் அவர்கள் அனுமதிக்கிறார்கள். ஒருவருடைய பின்புலம், விவரங்களைச் சரிபார்ப்பதில்லை. யூடியூப் சேனலை ஆரம்பிப்பவர்களிடம் ஆதார் எண்ணைக் கட்டாயம் கேட்கவேண்டும் என்று கூறி இந்த ட்வீட்டை பிரதமருக்கும் தமிழக முதல்வருக்கு அவர் டேக் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com