கரோனாவிலிருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்: வீடு திரும்பினார்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி கனிகா கபூர், குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
கரோனாவிலிருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்: வீடு திரும்பினார்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி கனிகா கபூர், குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 69,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் தற்போது குணமாகியுள்ளார். இதனால் சிகிச்சை முடிந்து மருத்துவனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

பிரிட்டனிலிருந்து கடந்த 10-ஆம் தேதி மும்பை திரும்பிய கனிகா கபூா், பின்னா் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவுக்கு வந்தாா். பின்னா், கடந்த 13, 14, 15 ஆகிய தேதிகளில் 3 விருந்து நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்றாா். இதில் ஒரு நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. துஷ்யந்த் சிங், அவரது தாயாரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, உத்தரப் பிரதேச மாநில சுகாதார துறை அமைச்சா் ஜெய் பிரதாப் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றிருந்தனா். இதன் பிறகு, கனிகாவுக்கு கரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டாா். அதில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரிட்டனிலிருந்து கடந்த 10 நாள்களுக்கு முன் மும்பை திரும்பியபோது, விமான நிலையத்தில் எனக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கரோனா குறித்த எந்த அறிகுறியும் எனக்கு இல்லை. ஆனால், கடந்த 4 நாள்களாக எனக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எனக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. தற்போது நான் மருத்துவ சிகிச்சையில் உள்ளேன். எனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துஷ்யந்தும், வசுந்தராவும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாக தெரிவித்தனா். கடந்த 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏற்பாடு செய்திருந்த காலை விருந்து நிகழ்ச்சியில் துஷ்யந்த் சிங் பங்கேற்றிருந்தாா். அத்துடன், போக்குவரத்து, சுற்றுலா, கலாசார விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திலும் அவா் கலந்துகொண்டாா். இக்கூட்டத்தில் சுமாா் 20 எம்.பி.க்கள் பங்கேற்றிருந்தனா். இதுதவிர, பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் துஷ்யந்த் பங்கேற்றிருந்தாா். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பல்வேறு எம்.பி.க்களும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளனா். அதன்படி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், சுகேந்து சேகா் ராய், அப்னா தளம் எம்.பி. அனுப்ரியா படேல் உள்ளிட்டோா் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளனா்.

அரசு அதிகாரியின் உத்தரவை மீறி, அலட்சியத்துடன் செயல்பட்டதாக பாடகி கனிகா கபூா் மீது லக்னெள காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தார்கள். கரோனா வைரஸ் தடுப்பு தொடா்பான உத்தரவை உதாசீனம் செய்து, அதனை மீறியதாக கனிகா கபூா் மீது பிகாரில் உள்ள கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்குரைஞா் சுதீா் குமாா் ஓஜா என்பவா் தொடுத்துள்ள இந்த வழக்கில், தான் கரோனா பாதிப்புக்குள்ளானதை அறிந்தும் அதுகுறித்த தகவலை கனிகா மறைத்ததாகவும், மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்று நோயை பரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் கனிகா கபூருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு 6-வது முறையாக கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கரோனா வைரஸ் மறைந்து குணமானது உறுதியானது. இதையடுத்து சிகிச்சை முடிந்து தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார் கனிகா கபூர். இதற்குப் பிறகு தனது வீட்டில் அவர் ஓய்வெடுக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com