மூத்த ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் தந்தை பசந்தகுமார் சக்கரவர்த்தி காலமாகியுள்ளார். அவருக்கு வயது 95.
சிறுநீரகப் பிரச்னைக்காக சிகிச்சை எடுத்து வந்த பசந்தகுமார், சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமாகியுள்ளார். இத்தகவலை மிதுன் சக்கரவர்த்தியின் மகன் நமாஷி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஒரு படப்பிடிப்புக்காக பெங்களூருக்குச் சென்ற மிதுன் சக்கரவர்த்தி, ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கேயே இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. தற்போது பெங்களூரில் உள்ள மிதுன் சக்கரவர்த்தி, இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள விரைவில் மும்பைக்கு வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.