
பிரபல நட்சத்திர தம்பதியரான கரீனா கபூர், சயிப் அலி கான் ஆகியோர் 2-வது குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்கள்.
2012-ல் நடிகை கரீனா கபூரும் நடிகர் சயிப் அலி கானும் திருமணம் செய்துகொண்டார்கள். 2016-ல் மகன் பிறந்தான். தைமூர் அலி கான் எனப் பெயர் சூட்டினார்கள்.
இந்நிலையில் 2-வது குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாக கரீனா கபூரும் சயிப் அலி கானும் இன்று தகவல் தெரிவித்துள்ளார்கள்.
இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் நடிகர் ஆமிர் கானின் அடுத்த படங்களில் கதாநாயகியாக நடிக்கிறார் கரீனா கபூர்.