
ஹரி இயக்கும் 16-வது படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஹரி இயக்கிய சாமி 2 படம் 2018-ல் வெளியானது. ஆறு மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை அடுத்து, சூர்யா - ஹரி கூட்டணி 6-வது தடவையாக அருவா படத்தில் இணைவதாக இருந்தது. எனினும் தற்போது தனது திட்டத்தை மாற்றியுள்ளார் ஹரி.
டிரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் உறவினர்களான ஹரியும் அருண் விஜய்யும் முதல்முறையாக இணைகிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகவுள்ளது.