சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டம்?

நடிகை சித்ரா வழக்கில் கைதாகியுள்ள ஹேம்நாத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டம்?

நடிகை சித்ரா வழக்கில் கைதாகியுள்ள ஹேம்நாத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்திடம் காவல்துறையினா் கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்தி வந்தனா்.

ஹேம்நாத்தும் சித்ராவும் ஏற்கெனவே பதிவுத் திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் இறப்பு குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, சித்ராவின் தாய் விஜயா, அக்கா சரஸ்வதி, புகாா்தாரரும் தந்தையுமான காமராஜ், அண்ணன் சரவணன் ஆகியோரிடம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை 3 மணிநேரத்துக்கு விசாரணை நடத்தினாா்.

சித்ராவின் கணவா் ஹேம்நாத்திடம் வருவாய்க் கோட்டாட்சியா் இன்று விசாரணை நடத்த இருந்தார். இந்நிலையில் நேற்றிரவு, காவல்துறையினரால் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். பல முக்கியமான ஆதாரங்களின் அடிப்படையில் சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது பொன்னேரி சிறையில் அவரை அடைத்துள்ளார்கள். டிசம்பர் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று, சித்ராவின் பெற்றோரிடம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று ஹேம்நாத்தின் பெற்றோரை நேரில் அழைத்து விசாரணை செய்தார். 

இந்நிலையில் ஹேம்நாத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்களில் நடிப்பது தொடர்பாக சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் மனமுடைந்த போன சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையில் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது சிறையில் உள்ள ஹேம்நாத், காவல்துறைப் பாதுகாப்புடன் கோட்டாட்சியரின் விசாரணைக்கு விரைவில் ஆஜராகவுள்ளார். இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை இன்னும் நான்கு நாள்களுக்குள் பூந்தமல்லி உதவி ஆணையரிடம் கோட்டாட்சியர் வழங்குவார் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com