
இந்த வாரம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவிருந்த மாதவன் நடித்த மாறா படம், ஜனவரி 8 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மாதவன் நடித்த சைலன்ஸ் படம் ஓடிடியில் வெளியானதையடுத்து அவர் நடித்த மற்றொரு படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மலையாள வெற்றிப் படமான சார்லி, தமிழில் மாறா என ரீமேக் ஆகியுள்ளது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவடா நாயர், மெளலி, அலெக்ஸாண்டர் பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான்.
அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கியுள்ள இப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் டிசம்பர் 17 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஜனவரி 8 அன்று வெளியாகும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.
We are maddy in love with this fairy tale already!
— amazon prime video IN (@PrimeVideoIN) December 15, 2020
Meet #MaaraOnPrime, January 8, 2021!@ActorMadhavan @ShraddhaSrinath @SshivadaOffcl @dhilip2488 @DesiboboPrateek @ShrutiNallappa @pramodfilmsnew @thinkmusicindia @thespcinemas @APIfilms @GhibranOfficial pic.twitter.com/ZrXUDBIROj