ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு: கரோனா பாதுகாப்பு வளையத்தில் படக்குழுவினர்!

கிரிக்கெட்டில் உள்ளது போல கரோனா பாதுகாப்பு வளையம் அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு: கரோனா பாதுகாப்பு வளையத்தில் படக்குழுவினர்!
Updated on
1 min read

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான். கரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இதற்காக நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தின் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்குச் சமீபத்தில் புறப்பட்டுச் சென்றாா். விமானத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது பிறந்த நாளைக் கொண்டாட, விமானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினாா். 

ஹைதராபாத் சென்றுள்ள ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, 45 நாள்களுக்குத் தொடர்ச்சியாக அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. மேலும் அனைத்துக் காட்சிகளும் உள் அரங்கில் படமாக்கப்படுகிறது. கிரிக்கெட்டில் உள்ளது போல கரோனா பாதுகாப்பு வளையம் அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, படப்பிடிப்புக் குழுவினர் வெளியே செல்ல அனுமதி இல்லை. இதேபோல வெளி ஆள்களும் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழையக் கூடாது. 

இந்தக் கட்டுப்பாடுகளால் ஒரே ஊரில் இருந்தும் நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் படமாக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். 

ஜனவரி மாதத்துக்குள் அண்ணாத்த படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பிறகு கோடை விடுமுறையில் அண்ணாத்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com