
சிங்கப்பூரில் உள்ள மேடம் டூஸாட் மெழுகுச்சிலை மியூசியத்தில், நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நடிகை காஜல் அகர்வால் தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் - படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிங்கப்பூர் மேடம் டூஸாட் மியூசியத்தில் காஜல் அகர்வாலின் மெழுகுச்சிலை இடம் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் நடிகை காஜல் அகர்வால் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...