
இந்த வாரம் பிப்ரவரி 21 அன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன.
அருண் விஜய் நடிப்பில் மாஃபியா, சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம், பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள மீண்டும் ஒரு மரியாதை, காட்ஃபாதர், சிறந்த தமிழ்ப் படமாகத் தேசிய விருது பெற்ற பாரம், குட்டி தேவதை ஆகிய ஆறு படங்கள் வெளியாகவுள்ளன.
இந்தப் படங்களில் மாஃபியா, சர்வர் சுந்தரம் ஆகிய இரு படங்களுக்கும் வார இறுதி நாள்களில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.