
பிரபல நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த டிசம்பர் 13 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
பெண்கள் மட்டுமே போட்டியாளர்களாகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் ரூ. 1 கோடி பரிசை வென்று சாதனை படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் கெளசல்யா, காது கேளாத, வாய் பேச முடியாதவர். கோடீஸ்வரி போன்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி ஒருவர் பங்கேற்று ரூ. 1 கோடி பரிசு வென்றதும் இதுவே முதல்முறை.
கெளசல்யா ரூ. 1 கோடி வெல்லும் கோடீஸ்வரி நிகழ்ச்சி இன்றும் நாளையும் ஒளிபரப்பாகவுள்ளது.
15 வது கேள்வி.. ரூ.1 கோடிக்கான கேள்வி..!!
— Colors Tamil (@ColorsTvTamil) January 16, 2020
கௌசல்யா தமிழ்நாட்டின் முதல் கோடீஸ்வரி ஆவாங்களா, இல்லையா..?? #ColorsKodeeswari | வரும் திங்கள் - செவ்வாய் இரவு 8 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில்.#ColorsKodeeswari | @RealRadikaa | @SPNStudioNext | #Kousalya pic.twitter.com/83wPv8VriM

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...