திரைத்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.உமர் காலமானார்

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலைச் சேர்ந்த எஸ்.எம்.உமர் (95) திங்கள்கிழமை அதிகாலை காலமானார்.
திரைத்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.உமர் காலமானார்

காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலைச் சேர்ந்த எஸ்.எம்.உமர் (95) திங்கள்கிழமை அதிகாலை காலமானார்.

தமது 20 வயதில் திரைத்துறையில் நுழைந்து, உதவி இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற முகங்களுடன் வலம் வந்து, சுமார் 600 இந்திய மொழிப் படங்களை வியத்நாம் மொழியில் டப் செய்து வெளியிட்டு, பழம்பெரும் நடிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எஸ்.எம்.உமர்.

நாடகத்துறையில் தமது பங்களிப்பை வெளிப்படுத்தியதோடு, பத்திரிகைத் துறையில் நுழைந்து 1939-இல் இளம்பிறை, கதம்பம், குரல் மற்றும் உமர் கய்யாம் என்ற பத்திரிகைகளை நடத்தியுள்ளார். 

பட்டங்கள்: தமிழக அரசு 1998, புதுச்சேரி அரசு 2006-இல் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. சினிமாவில் கலைச்செல்வர் விருது 1993-இல், கலைச்சுடர் விருது 1995-இல் என 25-க்கும் மேற்பட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார். 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதுமை காரணமாக வீட்டிலேயே இருந்துவந்த அவர், திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் காலமானார். காரைக்காலில் இன்று பகல் 11.30 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com