ரஜினியின் சமீபத்திய புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
கரோனா அச்சுறுத்தலால் கார் ஓட்டுநர் யாரையும் அனுமதிக்காமல் முகக்கவசம் அணிந்து சீட் பெல்ட் போட்டுக்கொண்டு, லம்போர்கினி சொகுசு காரை தானே ஓட்டுகிறார் ரஜினி. கரோனா பாதுகாப்பு முறைகளுடன் ரஜினி காரை ஓட்டும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168-வது படம். அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறாா்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறாா். கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில் அண்ணாத்த படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் உருவாகியுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.