
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் டெனட் (Tenet) என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, மைக்கேல் கைன், டிம்பிள் கபாடியா போன்றோர் நடித்துள்ள இந்தப் படம் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
டெனட் படம், முதலில் ஜூலை 17 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு வாரங்களுக்கு அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 31 அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. பிறகு ஆகஸ்ட் 12 என வெளியீட்டுத் தேதி மீண்டும் மாற்றப்பட்டது. ஆனால் தற்போது படத்தின் வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மீண்டும் இயங்குவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.