நடிகை ரியா மீது சுசாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் விவரங்கள்!

சுசாந்த் சிங்குக்குச் சொந்தமான 1.5 கோடி ரூபாய் அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாக....
நடிகை ரியா மீது சுசாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் விவரங்கள்!

சுசாந்த் சிங்குக்குச் சொந்தமான 1.5 கோடி ரூபாய் அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுசாந்த் சிங்கின் தந்தை புகார் அளித்துள்ளார்.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) கடந்த ஜூன் 14 அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

சுசாந்தின் நெருங்கிய தோழியான நடிகை ரியா சக்ரபோர்தி, சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தார். 

இந்நிலையில் நடிகை ரியா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பாட்னா காவல்துறையில் சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகார் அளித்துள்ளார். சுசாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரியா மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார். 

சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகாரில் கூறியுள்ளதாவது:

மே 2019 வரை என்னுடைய மகன் சுசாந்த் சிங், பாலிவுட்டில் சிறப்பான முறையில் முன்னேறிக் கொண்டிருந்தார். அப்போது ரியா சக்ரபோர்தியும் அவருடைய குடும்பத்தினரும் என் மகனுடன் பழக ஆரம்பித்தார்கள். இதன்மூலம் சுசாந்தின் தொடர்புகளைக் கொண்டு பாலிவுட்டில் வாய்ப்புகளைப் பெற எண்ணினார்கள். 

ரியாவும் அவருடைய குடும்பத்தினரும் சுசாந்தின் வாழ்க்கையில் தலையிட ஆரம்பித்தார்கள். சுசாந்த் தங்கியிருந்த வீட்டில் அமானுஷ்ய நடவடிக்கைகள் ஏற்படுவதாகச் சொல்லி அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இது சுசாந்தின் மனநிலையை மிகவும் பாதித்தது. மிகவும் வற்புறுத்தி, மும்பை விமான நிலையத்தின் அருகே உள்ள ரிசார்ட்டில் அவரைத் தங்க வைத்தார்கள். சுசாந்த் சிங்குக்குச் சொந்தமான ரூ. 1.5 கோடி அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. 

சுசாந்திடமிருந்த லேப்டாப், பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை ரியாவும் அவருடைய குடும்பத்தினரும் திருடி விட்டார்கள். மேலும் சுசாந்தின் மருத்துவ அறிக்கைகளை வெளியில் சொல்வதாக மிரட்டியுள்ளார்கள். சுசாந்துக்கு என்ன விதமான மருத்துவ சிகிச்சையும் மருந்துகளும் அளிக்கப்பட்டன என்பது பற்றி எங்களுக்குத் தெரிய வேண்டும். ரியாவுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியிருப்பார்கள் எனச் சந்தேகப்படுவதால் சுசாந்துக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று தனது புகாரில் கே.கே. சிங் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com