
குக்கூ, ஜோக்கர் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள படம் - ஜிப்ஸி.
ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன்.
தணிக்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிப் போனது. கடைசியில், ஜிப்ஸி படம் மார்ச் 6-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பார்த்துள்ளார். நேற்று, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூ திரையரங்கில் ஸ்டாலின், துரைமுருகன், திண்டுக்கல் ஐ. பெரியசாமி, ஏ.வ. வேலு போன்ற திமுகவின் முக்கியத் தலைவர்கள் ஜிப்ஸி படத்தைக் கண்டுகளித்தார்கள். படம் பார்த்த பிறகு படக்குழுவினரை ஸ்டாலின் பாராட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பு, தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தை தூத்துக்குடியில் பார்த்தார் ஸ்டாலின். இதையடுத்து இந்தப் படத்தைப் பார்த்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...