
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினா் மீண்டும் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்திய நிலையில், கடந்த 5ம் தேதி விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்திலேயே நடிகர் விஜய்யிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும், சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் பனையூரில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித் துறையினா் மேற்கொண்டுள்ள சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.