
புகைப்படம்: சுட்டுரை
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், " நான் நலமாக உள்ளேன். அறிகுறிகள் இல்லை. மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். மேற்கொண்டு வீட்டுக் கண்காணிப்பில் இருப்பேன்." என்றார்.
இதைத் தொடர்ந்து, கரண் ஜோஹர், அதிதி ராவ் ஹைதரி, ஹீமா குரேஷி உள்ளிட்ட பல்வேறு திரைத்துறையினர் அவர் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர்.