
மலையாள சினிமாவின் அறியப்பட்ட இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் ஐந்து வருடங்கள் கழித்து தனது புதிய படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சென்னை: மலையாள சினிமாவின் அறியப்பட்ட இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் ஐந்து வருடங்கள் கழித்து தனது புதிய படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதைத்தொடர்ந்து `பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இந்தப்படம் தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது.
குறிப்பாக அந்தப் படத்தில் மலர் என்னும் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களால் அமோகமாக ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் ஐந்து வருடங்கள் கழித்து தனது புதிய படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது அடுத்த படத்தின் பெயர் ‘பாட்டு’. நடிகர் பகத் பாசில் ஹீரோவாக நடிக்கிறார். யு.ஜி.எம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இம்முறை எனது படத்திற்கு நான் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளேன். மலையாளத்தில் எடுக்கப்படும். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப குழு பற்றிய விவரத்தை படம் எடுக்கப்படும்போது தெரிவிக்கிறேன்". என்று கூறியுள்ளார்.