விஜய் 65 படத்தில் நடிக்கிறேனா?: துப்பாக்கி வில்லன் பதில்

விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் தான் நடிப்பதாக வெளியான தகவல்...
விஜய் 65 படத்தில் நடிக்கிறேனா?: துப்பாக்கி வில்லன் பதில்

விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் தான் நடிப்பதாக வெளியான தகவல் தவறு என நடிகர் வித்யுத் ஜமால் கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65-வது படத்துக்கு ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத்.

இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். 

விஜய் 65 படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.

இந்நிலையில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜமால், விஜய் 65 படத்திலும் வில்லனாக நடிப்பதாக வெளியான ஒரு செய்திக்கு ஜமால் கூறியதாவது:

ஐ ஆம் வெயிட்டிங்... ஆனால் இந்தச் செய்தி தவறானது என்று கூறியுள்ளார். 

பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் ஆகிய தமிழ்ப் படங்களில் வித்யுத் ஜமால் நடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com