தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ (படம் - twitter.com/XBFilmCreators)
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ (படம் - twitter.com/XBFilmCreators)

மாஸ்டர் படத் தயாரிப்பாளரின் புதிய அறிவிப்பு

மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, அடுத்து தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Published on

மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, அடுத்து தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்தார். ஜனவரி மாதம் இப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் முரளியின் மகனும் அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை சேவியர் பிரிட்டோ அடுத்ததாகத் தயாரிக்கிறார். இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்கவுள்ளார். இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com