ஆஸ்கர்: முக்கிய விருதுகளை வென்றவர்கள் யார் யார்?

சிறந்த ஆவணப் படத்துக்கான விருதை மை ஆக்டோபஸ் டீச்சர் வென்றுள்ளது. 
சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றவர்கள்
சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றவர்கள்

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது. 

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2021 பிப்ரவரி 28-க்குப் பதிலாக ஏப்ரல் 25 அன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 

ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேரடியாகவும் இணையம் வழியாகவும் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யூனியன் ஸ்டேஷன், டால்பி திரையரங்கம் ஆகிய இடங்களில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களும் விருந்தினர்களும் நியூ யார்க் மற்றும் லண்டனில் அமைக்கப்பட்ட கூடுதல் விழா அரங்கிலும் கலந்துகொண்டார்கள். 

சிறந்த படத்துக்கான விருதை நோமட்லேண்ட் பெற்றுள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருதை ஜாவோ (நோமட்லேண்ட்), சிறந்த நடிகருக்கான விருதை ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்), சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மெக்டர்மாண்ட்  (நோமட்லேண்ட்) சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை எரிக் (மான்க்) ஆகியோர் பெற்றுள்ளார்கள். சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதை டென்மார்க்கின் அனதர் ரவுண்ட் படம் பெற்றுள்ளது. சிறந்த அனிமேஷன் படமாக சோல் தேர்வாகியுள்ளது. சிறந்த ஆவணப் படத்துக்கான விருதை மை ஆக்டோபஸ் டீச்சர் வென்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com