பிக்பாஸ் லாஷ்லியா, தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்பட முதல் பார்வை வெளியீடு
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் முதல்பார்வையை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
கூகுள் குட்டப்பா எனும் பெயரில் தமிழில் ரீமேக்காகி வரும் கேரளத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துவருகிறார்.
பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமாரின் துணை இயக்குநர்கள் சரவணன் மற்றும் சபரி இந்தத் திரைப்படத்தை இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வையை செவ்வாய்க்கிழமை நடிகர் சூர்யா இணையத்தில் வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.