
'செம்பருத்தி' தொடரில் கதாநாயகியாக நடிக்கும் ஷபனாவிற்கு பிரபல சின்னத்திரை நடிகருடன் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' தொடர் கடந்த சில வருடங்களாக மக்கள் அதிகம் பார்க்கும் சின்னத்திரை தொடர்களில் முன்னணியில் இருக்கிறது. இந்தத் தொடரில் நடித்து வரும் நடிகர்களுக்கென சமுக வலைதளங்களில் தனி ரசிகர் வட்டம் உள்ளது.
இந்தத் தொடரில் கதாநாயகியாக நடிக்கும் சபனாவுக்காவே இந்தத் தொடரை பார்ப்பவர்கள் ஏராளம். சபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் 'பாக்கியலட்சுமி' தொடரில் நடிக்கும் ஆர்யன் என்பவருக்கும் சபானாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாம். இதனை ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் இருவரும் தங்களது கைகளில் மோதிரம் மாட்டியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், ''அவளது உயிரின் மேல் காதல் வயப்பட்டேன். காரணம், இருவரது புற அழகும் ஒருநாள் காணாமல்போகும். ஆனால் உயிர் அப்படியே இருக்கும். அங்கு தான் காதல் வாழும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு சபனா, ''என்னை எப்பொழுதும் நீங்கள் ஆச்சரியப்பட வைக்கத் தவறுவதில்லை'' என காதலுடன் பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க| நெற்றிக்கண் திரைப்பட பாடல் இன்று (ஆகஸ்ட் 5) வெளியீடு
மேலும் அவரது பதிவில் எப்பொழுது இருவருக்கும் கல்யாணம் என ரசிகர்கள் கேட்க, 'சொல்றோம்' என பதில் கூறியுள்ளார். விரைவில் இருவரும் திருமண தேதியை வெளிப்படையாக அறிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.