சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக் கடைசியாக பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி, அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், ஓடிடியிலும் வெளிவர ஆரம்பித்துள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் ஓடிடியில் வெளியானது ஓர் உதாரணம். லோல் ( LOL, Last One Laughing) என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி வருகிறது. பத்து நகைச்சுவையாளர்கள் ஓர் அறையில் தங்க வைக்கப்படுவார்கள். ஒருவருக்கொருவர் மற்றவர்களைச் சிரிக்கவைக்க வேண்டும். பத்து நகைச்சுவையாளர்களில் கடைசியாக யார் சிரிக்கிறார்களோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். சகப் போட்டியாளர்களின் நகைச்சுவைகளுக்குச் சிரிக்காமல் உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் இருப்பது கடினம் என்பதால் இந்தப் போட்டி பல நாடுகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. (தமிழில் விஜய் தொலைக்காட்சியில் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு சுற்றில் இதுபோல ஒரு நிகழ்ச்சி ஏற்கெனவே வெளியானது. அதில் போட்டியாளர்களைச் சிரிக்க வைக்க ஒருவர் முயற்சி செய்வார். சிரிக்காமல் கடைசி வரை இருப்பவருக்கு அதிகப் புள்ளிகள் வழங்கப்படும்.) ஹிந்தியில் உருவாக்கப்பட்ட லோல் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதக் கடைசியில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.
இந்நிலையில் லோல் நிகழ்ச்சி தற்போது தமிழிலும் வெளியாகவுள்ளது. லோல்: எங்க சிரி பார்ப்போம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை மறைந்த நடிகர் விவேக்கும் நடிகர் சிவாவும் தொகுத்து வழங்கியுள்ளார்கள். ஆறு எபிசோட்கள் கொண்ட இந்த நிகழ்ச்சி அமேசான் பிரைம் ஓடிடியில் ஆகஸ்ட் 27 அன்று வெளியாகிறது. இதுகுறித்த விளம்பரம் இன்று வெளியாகியுள்ளது. பிரேம்ஜி, பவர்ஸ்டார் சீனிவாசன், ஆர்த்தி, புகழ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், சதீஷ், அபிஷேக் குமார், மாயா கிருஷ்ணன், ஷியாமா ஹரிணி, பேகி ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


