

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'பூவே உனக்காக' தொடரில் நடிகை சாயா சிங் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'திருடா திருடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயா சிங். அந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து அவர் நடனமாடிய மன்மத ராசா பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்று, படத்துக்கே அடையாளமாக அமைந்தது.
அதனையடுத்து நடிகர் விஜய்யுடன் இணைந்து 'திருப்பாச்சி' படத்தில் கும்பிடபோன தெய்வம், 'அருள்' படத்தில் உக்கடத்து பம்பரம் ஆகிய பாடல்களுக்கு நடனமாடினார்.
இந்தப் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தன்னுடன் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தில் நடித்த கிருஷ்ணாவை காதலித்து மணந்துகொண்டார். இருவரும் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பான 'ரன்' தொடரில் நடித்தனர்.
இந்த நிலையில் அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'பூவே உனக்காக' தொடரில் நடிக்கிறார். இதற்கான முன்னோட்டத்தை சன் டிவி வெளியிட்டுள்ளது.
இந்தத் தொடரில் நடிகை சாயா சிங் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. நடிகை சாயா சிங்கின் வருகைக்கு பிறகு, இந்தத் தொடர் மேலும் விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.