மீண்டும் ஒலிக்கும் வளையோசை?: ஃபுட்போர்டில் தொங்கிச் செல்லும் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா! (விடியோ)

மீண்டும் ஒலிக்கும் வளையோசை?: ஃபுட்போர்டில் தொங்கிச் செல்லும் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா! (விடியோ)

கமலும் அமலாவும் பேருந்து ஃபுட்போர்டில் தொங்கியபடிச் செல்லும் காட்சியை யாரால் மறக்க முடியும்?
Published on


போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன், அடுத்ததாக, காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் இப்படத்துக்கு இசை - அனிருத். தயாரிப்பு - லலித் குமார். பிரபல நடிகர், நடிகைகள் நடிப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சத்யா படத்தில் வளையோசை கலகலவென பாடலின் இறுதியில் கமலும் அமலாவும் பேருந்து ஃபுட்போர்டில் தொங்கியபடிச் செல்வார்கள். இந்தக் காட்சியை யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் அதேபோலொரு காட்சி அமைக்கப்பட்டுள்ளதா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதற்குக் காரணம், வெளியான ஒரு விடியோ. 

பேருந்து ஃபுட்போர்டின் கடைசிப் படியில் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகிய மூவரும் நின்றுகொண்டு செல்வது போலவும் பின்னணியில் வளையோசை பாடல் ஒலிப்பது போலவும் உள்ள விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.  இதனால் வளையோசை பாடலை நினைவுபடுத்தும் காட்சி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவே ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். புதுச்சேரியில் எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சியின் விடியோ சமூகவலைத்தளங்களில் கசிந்தது பற்றி இயக்குநர் விக்னேஷ் சிவன் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com