
பள்ளி மாணவர்களின் வாழ்வியலை மிக இயல்பாக பதிவு செய்த தொடர் கனா காணும் காலங்கள். இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் அடுத்த பாகம் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை மிக அழகாக காட்சிப் படுத்தியது.
மாணவர்களின் நட்பு, அந்த வயதுக்கே உரிய சேட்டைகள் என அன்றைய மாணவர்களை தத்ரூபமாக பிரதிபலிக்கும் விதமாக அந்தத் தொடர் அமைந்திருந்தது.
இந்த நிலையில் அந்தத் தொடர் மீண்டும் ஒளிபரப்பாகவிருக்கிறது. ஆனால் இந்த முறைய விஜய் டிவியில் இல்லை. நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவிருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.