பிரசாந்த் நடிக்கும் அந்தகன்: அந்தாதுன் தமிழ் ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

பிரசாந்த் நடிக்கும் அந்தகன்: அந்தாதுன் தமிழ் ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார்.
Published on

அந்தாதுன் தமிழ் ரீமேக்குக்கு அந்தகன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன்.

அதுமட்டுமல்லாமல் இந்தப் படம்  சிறந்த நடிகர் - (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. 

அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அந்தாதுன் ரீமேக்குக்கு அந்தகன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிரசாந்த், சிம்ரன், கார்த்திக் நடிப்பதும் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக் அந்தகன் படத்தை இயக்குகிறார். தபு வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். 

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர். 

கோடை விடுமுறையில் திரையரங்குகளில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com