சிவகார்த்திகேயனின் அயலான்: படப்பிடிப்பு நிறைவு!
சிவகார்த்திகேயன் - ஆர். ரவிகுமார் கூட்டணியில் உருவாகும் அயலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.


சிவகார்த்திகேயன் - ஆர். ரவிகுமார் கூட்டணியில் உருவாகும் அயலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர். ரவிகுமாரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அயலான் என்று பெயரிடப்பட்டுள்ள கதாநாயகி - ரகுல் ப்ரீத் சிங். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - நிரவ் ஷா.
இந்நிலையில் அயலான் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இத்தகவலை இயக்குநர் ஆர். ரவிகுமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறையின்போது டாக்டர் படம் வெளியாகிறது. இதன்பிறகு டிசம்பரில் அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...