
தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான நக்ஷத்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் நக்ஷத்ரா - லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி, வாணி ராணி போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் காதலர் ராகவுடன் தனக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளதை இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார் நக்ஷத்ரா. பள்ளிக்காலத்தில் அறிமுகமான ராகவைக் காதலித்து வந்த நக்ஷத்ரா விரைவில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்யவுள்ளார். ராகவுடனான திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.