

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, நடிகையாகத் தமிழில் அறிமுகமாகும் படம் - பிரண்ட்ஷிப்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜூன், லாஸ்லியா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா. இசை - டி.எம். உதயகுமார்.
இந்தப் படம் மட்டுமல்லாமல் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா என்கிற படத்திலும் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். தமிழ் ட்வீட்கள் மூலம் சமூகவலைத்தளத்தில் தனக்கென்ன ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழ்ப் படங்களில் இனி அடிக்கடி இடம்பெறப் போகிறார் எனத் தெரிகிறது.
இன்று தனது 41-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஹர்பஜன் சிங். இதையொட்டி பிரண்ட்ஷிப் படத்தின் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அடிச்சு பறக்க விடுமா என்கிற இந்தப் பாடலை தேவா பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.