

அருவி படத்தின் மூலம் கவனம் பெற்ற அருண் பிரபு புருஷோத்தமன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் - வாழ்.
நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். பிரதீப், பானு, திவா, யாத்ரா போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஷெல்லி, இசை - ப்ரதீப் குமார்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வாழ் படம் வெளியாகவிருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வாழ் படம், தற்போது சோனி லைவ் ஓடிடியில் ஜூலை 16 அன்று நேரடியாக வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.