காஜல் அகர்வால் நடிக்கும் உமா: கொல்கத்தாவில் தொடங்கிய படப்பிடிப்பு

காஜல் அகர்வால் நடிக்கும் உமா என்கிற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. 
காஜல் அகர்வால் நடிக்கும் உமா: கொல்கத்தாவில் தொடங்கிய படப்பிடிப்பு
Updated on
1 min read

காஜல் அகர்வால் நடிக்கும் உமா என்கிற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் - பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் அக்டோபர் 30 அன்று தொழிலதிபர் கெளதம் கிச்லுவைத் திருமணம் செய்தார். ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் இணையத்தொடரிலும் நடித்திருந்தார். 

இந்நிலையில் உமா என்கிற ஹிந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால். அறிமுக இயக்குநர் டதாகடா சின்ஹா இயக்கத்தில் உருவாகும் உமா படத்தை அவ்மா மீடியா, மிராஜ் குரூப் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 

உமா படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com